கோலிக்கு அனைத்து விதத்திலும் உதவி வழங்கப்படும்! கங்குலி பேச்சு!

24 October 2019 விளையாட்டு
souravgangulaybcci.jpg

23ம் தேதி, பிசிசிஐ அமைப்பின் அதிகாரப் பூர்வத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் முன்னாள் இந்தியி கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. அவர் இன்று காலை, 39வது பிசிசிஐ தலைவராகப் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற பின் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். செய்தியாளர்கள் தோனியின் ஓய்வு பற்றிக் கேட்டனர். அதற்குப் பதில் கூறிய கங்குலி, சாதனையாளர்கள் அவ்வளவு எளிதில் ஆட்டத்தினை முடித்துக் கொள்ளமாட்டார்கள். நான் தோனியின் விஷயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன். அவருடைய ஓய்வு அவருடைய கையில் தான் உள்ளது. அவருக்கு மரியாதை செய்வது நம்முடைய கடமை. எம்எஸ் தோனியைப் பெற்றதில் இந்தியா பெருமை கொள்கின்றது. தோனியின் சாதனைகள் இந்தியாவினை, பெருமை அடையச் செய்துள்ளன.

நான் விளையாட்டினை விட்டு வெளியே சென்றதும், இனி கங்குலி அவ்வளவு தான் என்றனர். ஆனால், நான் மீண்டும் வந்து 4 ஆண்டுகள் விளையாடினேன். சாம்பியன்கள் அவ்வளவு எளிதில், விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

கோலியைப் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, கோலி ஆகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் தற்பொழுது பல சாதனைகளைப் புரிந்து வருகின்றார். அவருக்கு பிசிசிஐ அனைத்து விதங்களிலும், உதவிகரமாக இருக்கும் எனவும் கங்குலி தெரிவித்தார்.

கங்குலி தலைவராகப் பதவியேற்றது குறித்து, விராட் கோலியிடம் கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்துள்ள கோலி, கங்குலி தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவர் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபர் 24ம் தேதி என்னை அவர் காண்பதாக் கூறியிருக்கின்றார். அவர் அழைக்கும் பொழுது, நான் சென்று அவரைப் பார்ப்பேன். தோனியின் ஓய்வு குறித்து அவர் எதுவும் கூறவில்லை எனவும் கூறினார்.

HOT NEWS