கிரிக்கெட் பேட் சரி செய்பவருக்கு கை கொடுத்த சச்சின், சோனு சூட்!

26 August 2020 சினிமா
sonusood.jpg

கிரிக்கெட் பேட்டினை சரி செய்து தந்து வந்த அஷரப் சௌத்திரிக்கு தற்பொழுது சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் பிடித்த நபராக இருப்பவர் மும்பையினைச் சேர்ந்த அஷரப் சௌத்ரி. இவர் கிரிக்கெட் வீரர்களின் பேட்டினை சரி செய்து தரும் வேலையினைச் செய்து வந்தார். இவருக்கு சர்வதேச அளவில், ரசிகர்கள் உள்ளனர். இவரிடம், பல நாட்டு வீரர்களும் தங்களுடைய பேட்டினை சரி செய்து கொடுக்கக் கூறுவர். அந்த அளவிற்கு, மனிதர் வித்தைக்காரர்.

இவர் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் பார்ப்பதற்கு, தனி இடமே வழங்கப்படும். அந்த அளவிற்கு, இவர் பிரபலமானவர். இவருக்கு தற்பொழுது ஊரடங்கின் காரணமாக, பெருமளவில் வருமானம் இல்லை. போதாத குறைக்கு, கிட்னியில் கல்லடைப்பு வேறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு பண வசதி இல்லாததால், பெருமளவில் சிக்கல் ஏற்பட்டது. இது நடிகர் சோனு சூட்டின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. விஷயம் தெரிந்த சோனு, உடனடியாக அவருடையப் புகைப்படத்தினை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவருடைய முகவரியினை தெரிவியுங்கள் என்றுக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விஷயம் கிரிக்கெட் உலகின் மன்னான சச்சின் டெண்டுல்கரிடம் சென்றுள்ளது. அவ்வளவு தான். உதவிகள் குவியத் துவங்கி விட்டன. சச்சின் மட்டுமின்றி, தற்பொழுது பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். இதனால், அஷரப் மகிழ்ச்சியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

HOT NEWS