யார் இந்த சோனாலி பிரதீப்? கோவையை கலக்கும் அதிமுக பிரமுகர்!

29 November 2019 அரசியல்
sonalipradeep1.jpg

பார்க்கும் அனைவரையும், மெய் மறக்க வைக்கும் அழகுடன் காட்சி தரும் இவர், மிஸ்ஸஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். கோவையில் உள்ள கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகின்றார். இவர் ஒரு வடநாட்டுப் பெண். இவருக்கு திருமணமாகி ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இவர் தான் தற்பொழுது, கோவையில் உள்ள பல அதிமுக பிரமுகர்களின் வயிற்றில் புளியைக் கறைத்துக் கொண்டு இருப்பவர். காரணம், இவர் தானே இந்த முறை கோயம்புத்தூரின் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, விண்ணப்பம் எல்லாம் கொடுத்துள்ளாராம். தற்பொழுது, மேயரை கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதனை அடுத்து, அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

மிஸ்ஸஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்தப் பெண், கோவைக்கு முதல்வர் வரும் பொழுது, அவருடன் ஒருப் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், அங்கு வரும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அதிமுகவில் இணைந்த அவர், தொடர்ந்து அதிமுக கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்.

இதனால், அப்செட்டான உள்ளூர்வாசிகள் இவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தொடர்ந்து இவர் மேடையில் பேசி வருவதால், அவரை என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் உள்ளூர் கட்சிக்காரர்கள். என்ன தான் அழகை வைத்துக் கொண்டு முன்னிலைப் பெற்றாலும், அரசியலுக்குள் அதலாம் எடுபடுமா என பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

HOT NEWS