ஸ்மார்ட் கிரிக்கெட் பால்! விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூக்கப்பூரா!

19 September 2019 விளையாட்டு
cricketball.jpg

ஸ்டெம்புகளில், எல்ஈடி லைட் வைத்து, ஸ்டெம்பிங் மற்றும் போல்ட் ஆகும் விதத்தின் துல்லியத்தை வெற்றிகரமாக கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட பின், கிரிக்கெட்டின் தரம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

ஸ்டெம்புகளில், எல்ஈடி லைட் வைத்து, ஸ்டெம்பிங் மற்றும் போல்ட் ஆகும் விதத்தின் துல்லியத்தை வெற்றிகரமாக கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட பின், கிரிக்கெட்டின் தரம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

உலகளவில் பிரசித்திப் பெற்ற, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கூக்கப்பூரா என்ற நிறுனவம், தற்பொழுது கிரிக்கெட் பந்துகளில் சென்சாரை வைத்து, அதனை வீசிப் பயிற்சி செய்து வருகின்றது. இந்த பந்து வெற்றிகரமாக தயாராகிவிட்டால், நாம் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பொழுது, பந்தின் வேகத்தையும், அதன் திசையையும் துல்லியமாக கணிக்க முடியும்.

இதுப் பற்றிப் பேசியுள்ள அந்த நிறுவனம், இந்தப் பந்தின் பின் பகுதியில், ஒரு சிப் உள்ளே வைக்கப்பட்டு இருக்கும். அதில் ஒரு டிரான்ஸ்மிட்டர் இருக்கும். அது, தரையில் பட்டதும், பந்தின் வேகம், திசை உட்பட பல விஷயங்களை, கையில் உள்ள போன் அல்லது டேப்லட் உள்ளிட்ட பல கருவிகளுக்கு அனுப்பும். இதன் மூலம், கிரிக்கெட்டின் திசையை அடுத்த பரிணாமத்திற்குக் கொண்டு செல்ல இயலும் என அந்நிறுவன நிர்வாகி கூறியுள்ளார்.

இந்த ஸ்மார்ட் கிரிக்கெட் பால் வந்துவிட்டால், பந்து செல்லும் வேகத்தை துல்லியமாக கணிக்க முடியும். அதன் மூலம், இன்னும் தெளிவான கிரிக்கெட் பயிற்சியினை வீரர்களால் செய்ய இயலும்.

Source: www.zdnet.com/article/kookaburra-takes-a-swing-at-creating-a-smart-cricket-ball

HOT NEWS