மாநாடு படத்தில் சிம்புவின் பெயர் அப்துல் காலிக்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

04 February 2020 சினிமா
maanaduname.jpg

நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின், சூட்டிங்கானது ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும், முக்கிய நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்கும் சிம்பு, ஒரு இஸ்லாமியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கு சிம்புவின் ரசிகர்களே பெயர் வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நடிக்கும் சிம்புவின் பெயரானது, நேற்று சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில், அப்துல் காலிக் என்றப் பெயரில், சிம்பு நடிக்க உள்ளார் என, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்குப் பின், படக்குழுவினருடன் இணைந்து, சிம்பு தன்னுடையப் பிறந்தநாளினைக் கொண்டாடி இருக்கின்றார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். வி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார். பாரதி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்க உள்ளார். சூட்டிங் மிக விரைவில் தொடங்க உள்ளது. இதனை தற்பொழுது, சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS