சிக்கிமில் அடி வாங்கி ஓடிய சீனா! தெறிக்க விட்ட இந்திய இராணுவம்! குவியும் பாராட்டுக்கள்!

25 January 2021 அரசியல்
indiansoldiers.jpg

சிக்கிம் மாநிலத்தில் ஊடுறுவ முயன்ற சீனாவின் இராணுவத்தினரை, இந்திய இராணுவத்தினர் அடித்து விரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த மே மாதம் தொடங்கி மோதல் போக்கானது நீடித்து வருகின்றது. ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர், சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதனையடுத்து, இந்திய இராணுவமும், சீன இராணுவமும் லடாக் மற்றும் லே பகுதிகளில் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டன. இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவானது.

இருப்பினும், இரண்டு நாட்டு உயரதிகாரிகளின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, எல்லையில் இருந்து இராணுவத்தினரை திரும்பப் பெறுவதாக இரு நாடுகளுமே முடிவு செய்தன. ஆனால், தொடர்ந்து, சீனா இராணுவமோ, அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் 4.5 கிலோ மீட்டர் அளவிற்கு ஊடுருவி, புதிய கிராமத்தினையே அந்நாடு உருவாக்கியுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், இந்திய இராணுவமானது தற்பொழுது முழுமையாக உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிக்கிம் மாநிலத்தினை ஒட்டியுள்ள நாகு லா பகுதியில், சீனாவின் இராணுவத்தினைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து உள்ளனர். இதனை அறிந்த அங்கிருந்த இராணுவ வீரர்கள் சீன இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி உள்ளிட்டவைகளை பயன்படுத்தாமல், கைகளால் சண்டையிட்டு உள்ளனர். இதில், சீனாவின் இராணுவத்தினைச் சேர்ந்த 20 வீரர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

பின்னர், இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளின் தலையீட்டின் காரணமாக, இந்த விவகாரம் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகின்றது. இதனை இந்தியாவின் பலரும், தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS