தக்காளியும், வெங்காயமும் ஏற்றுமதி செய்யும் பொழுது, கிரிக்கெட் விளையாடக் கூடாதா? அக்தர் காட்டம்!

19 February 2020 விளையாட்டு
shoaibaktar1.jpg

இந்தியாவிற்கு, தக்காளியும், வெங்காயமும் ஏற்றுமதி செய்யும் பொழுது ஏன் இரு நாடுகளும் கிரிக்கெட் ஆட்டம் விளையாடக் கூடாது என, உலகின் புகழ்பெற்ற பந்துவீச்சாளரான அக்தர் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், இரண்டு நாடுகளும் கடைசியாக 2012-2013ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடின. பாகிஸ்தான் அணியானது, இந்தியாவிற்கு பயணம் செய்து, மூன்று ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டன. 2007ம் ஆண்டு, கடைசியாக இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடின.

இரண்டு அணிகளும், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. இந்நிலையில், கபாடி, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில், கிரிக்கெட்டிற்கு மட்டும் ஏன் தடை இருக்கின்றது எனத் தெரியவில்லை.

எங்கள் பாகிஸ்தான் நாடு மிகவும் பாதுகாப்பானது. ஆனால், ஏன் இந்தியா இங்கு வர மறுக்கின்றது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட இரண்டு நாடுகளுமே, விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இரண்டு நாடுகளும், ஏன் ஏற்கனவே நடந்த போட்டிகள் போல், பொதுவான நாட்டில் கிரிக்கெட் விளையாடக் கூடாது. இரண்டு நாட்டு ரசிகர்களும், ஒருவரை ஒருவர் மதிப்பவர்கள்.

பாகிஸ்தானில் இருந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், கிரிக்கெட் மட்டும் விளையாடக் கூடாது என்பது எந்த விதத்தில் சரியானது என கேள்வி எழுப்பியுள்ளார்.

HOT NEWS