மொரீசியஸில் பாறையில் மோதிய சரக்கு கப்பல்! கடலில் கலந்த கச்சா எண்ணெய்!

10 August 2020 அரசியல்
mauritiusshipleak.jpg

மொரீசியஸில் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலானது, அங்குள்ளப் பாறையின் மீது மோதியக் காரணத்தால் 1000 டன் கச்சா எண்ணெயானது கடலில் கலந்துள்ளது.

மொரீசியஸ் கடற்பகுதியில் ஜப்பானிற்கு சொந்தமான எம்.வீ.வகாஷியோ என்ற சரக்குக் கப்பல் சென்று கொண்டு இருந்தது. அந்தக் கப்பலில், சுமார் 3800 டன் பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்தக் கப்பலானது, அங்குள்ள சர்வதேச பாதுகாப்புத் தளமாக உள்ள பாய்ண்ட் டி எஸ்னி என்ற இடத்தினை கடக்கும் பொழுது, அங்குள்ள பாறையின் மீது மோதியது.

இதனால், அந்தக் கப்பலில் கீரல்கள் விழுந்தன. இதனை அடைக்கும் முயற்சியில் கப்பல் ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டனர். இருப்பினும், அவர்கள் முயற்சியானது பலனளிக்கவில்லை. அந்தக் கப்பலில் இருந்த பெட்ரோலியம் கடலில் கசியத் தொடங்கியது. இதன் காரணமாக மொரீசியஸ் அரசு மீட்புப் பணியில் துரித கதியில் இறங்கியது.

இருப்பினும், பெட்ரோலியம் கசிவினை பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை. தொடர்ந்து, அந்தப் பகுதியில் பெட்ரோலியமானது கசிந்து கொண்டே உள்ளது. இதனால், அந்தக் கப்பலில் உள்ள ஊழியர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், அந்த நாட்டு அரசிடம் போதிய உபகரணங்கள் இல்லாததால், பிரான்ஸ் அரசிடம் உதவி கோரியுள்ளது.

HOT NEWS