பாதுகாப்பான உடலுறவால் நன்மையா? ஆராய்ச்சியின் அதிர்ச்சி முடிவுகள்!

12 March 2020 உடல்நலம்
sexbenefits.jpg

உலகில் மனிதனாகப் பிறக்கும் அனைவரும், இனப்பெருக்கம் என்னும் கடமையினை செய்வதில் இருந்து தவறுவதில்லை. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது உடலுறவு.

தற்பொழுது நிலவும் சூழ்நிலையில், உடலுறவின் மூலம், பல நோய்கள் பரவி வருகின்றன. எய்ட்ஸ், சிபிலிஸ் போன்ற பாலியல் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால், பொதுமக்களும், ஒன்றும் அறியாத பலரும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். காண்டம் உள்ளிட்ட உறைகளைப் பயன்படுத்துவதால், பாதுகாப்பான உடலுறவினை மேற்கொள்ள இயலும்.

இவ்வாறு செய்யும் உடலுறவில் பலவிதமான நன்மைகள் உள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களும், விவரங்களும் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகின்றது. உடலில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதையும் தடுக்கின்றது.

நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவதன் காரணமாக, நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கின்றது. ஆண் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் புற்றுநோயானாது தடைபடுகின்றது. இருத நோய் வராமல் தப்பிக்க இயலும். உடலுறவில், உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சீராக இரத்தம் செல்வதால், உடலில் உள்ள நரம்புகள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்த இயலும். நல்ல உடலுறவானது, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ததற்கு சமமாக பார்க்கப்படுகின்றது.

உடலில் ஏற்படுகின்ற ரத்த அழுத்தப் பிரச்சனைகள், ஒரு முடிவிற்கு வரும். வயிற்றுப் பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். புதிதாக ரத்தம் ஊறிக் கொண்டே இருக்கும். மனதில் உற்சாகம் எப்பொழுதும் இருக்கும். இவ்வளவு நன்மைகள் ஆண்-பெண் செய்யும் பாதுகாப்பான உடலுறவில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

HOT NEWS