அரசியலுக்கு சத்யராஜ் மகள்! மகளுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் சத்யராஜ்!

20 December 2020 அரசியல்
sathyaraj.jpg

திக கொள்கையினைப் பின்பற்றி வருகின்ற சத்யராஜ், தற்பொழுது தன்னுடைய மகளுக்காக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜ், தீவிரமான பெரிய சிந்தனையாளர். இவர் மதம், ஜாதி முதலியவைகளை முற்றிலுமாக வெறுப்பவர். இவர் தொடர்ந்து, கடவுள் மறுப்பாளராகவும், மக்கள் சமத்துவம் பேசுபவராகவும் இருந்து வருகின்றார். இவருடைய மகள் திவ்யா. இவர் தற்பொழுது மருத்துவராகப் பணிபுரிந்து வருகின்றார். அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளார்.

அவரும், அவருடையத் தந்தை சார்ந்த சித்தாந்தத்தையே பின் தொடர்கின்றார். அதனால், அவர் விரைவில் திக அல்லது திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றார். ஆனால், அவர் அரசியலில் ஈடுபட உள்ளேன் எனக் கூறியிருக்கின்றார். அதனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக அல்லது திக சார்பில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகின்றது. மேலும், அவருக்காக அவருடையத் தந்தையும் நடிகருமான சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட சத்யராஜ், தன்னுடைய மகளுக்காக தான் பிரச்சாரம் செய்ய உள்ளதாக, அறிக்கையும் வெளியிட்டு உள்ளார். இதனால், அவருடைய மகள் திவ்யா, திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், திக கட்சியானது, தேர்தலில் போட்டியிடாது. அதனை வைத்துப் பார்க்கும் பொழுது, திமுகவில் தான் அவர் இணைவார் என பிரபல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS