உலகின் உயரிய விருதுகளுள் ஒன்றான லாரியஸ் விருதானது, கிரிக்கெட் விளையாட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு உள்ளது. உலகின் சிறந்த வீரர் என்ற விருதுகள் ஹாமில்டன் மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
உலகின் சிறந்த விளையாட்டுத் தருணமாக, உலகக் கோப்பை போட்டியில் வென்ற பொழுது, சச்சினை தூக்கி வந்தத் தருணம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு, சச்சின் டெண்டுல்கர் விருது பெற்றார். அந்த புகைப்படமும், அங்கு பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பலரும், தங்களுடைய ஆதரவினை அளித்தனர்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், என் வாழ்வின் மிக உயரிய தருணமாக, இந்த விருதுனை பெரும் நாள் உள்ளது. எனக்கு இது மகிழ்ச்சி. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த, ரசிகர்கள், வீரர்கள் மற்றும் என் நாட்டு மக்களுக்கு இதனை சமர்ப்பிக்கின்றேன். கிரிக்கெட் விளையாட்டானது, எவ்வளவு வலிமையானது, என்பதனை அந்தப் புகைப்படத்தில் நான் உணர்கின்றேன்.
1983ம் ஆண்டு, எனக்கு பத்து வயது இருக்கும் பொழுது, இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்தேன். அப்பொழுது, இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அப்பொழுது, எனக்கு அது என்பது தெரியாது. அணியில் உள்ள வீரர்கள் அனைவரும், அதனை கொண்டாடினர். நானும், அவர்களுடன் கொண்டாடினேன். பின்னர், அந்த தருணம் அமைய 22 ஆண்டுகள் ஆனது. ஆனால், நான் என் முயற்சியினை கைவிடவில்லை.
நாட்டுக்காக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது தருணம் தான், என் வாழ்கையின் மிக பெருமையான தருணம் ஆகும். ஒட்டு மொத்த நாடும், என்னுடன் கொண்டாடியது. அதை என்னால், என்றும் மறக்க முடியாது. இந்த விருது அனைவருக்குமானது என்றார்.