பாலா படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்ட ஆர்கே சுரேஷ்! என்ன டெடிகேஷன்யா!!!

27 January 2020 சினிமா
rksureshbodytransformation.jpg

பில்லா பாண்டி, மருது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்கே சுரேஷ். இவர் ஏற்கனவே, பாலா இயக்கிய தாரைதப்பட்டைப் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இதனால், ஆர்கே சுரேஷினை தமிழகத்தில் பலருக்கும் தெரியும்.

இந்த நிலையில், பாலா தயாரிக்கும் படத்தில் தற்பொழுது நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சுரேஷ். இதற்காக தன்னுடைய உடல் எடையினை, 22 கிலோ கூட்டியுள்ளார். 73 கிலோவாக இருந்த உடல் எடையினை, தற்பொழுது 95 கிலோவாக அதிகரித்து உள்ளார். அவருடைய உடலினை தற்பொழுது, புகைப்படம் எடுத்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

மலையாள படமான ஜோசப் படத்தினை, தமிழில் பத்மகுமார் என்ற இயக்குநர் ரீமேக் செய்கின்றார். அதில், நடிப்பதற்காக, ஆர்கேசுரேஷ் தன்னுடைய உடல் எடையினை கூட்டியிருக்கின்றார். இந்தப் படத்தினை இயக்குநர் பாலா, தன்னுடைய சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பீ-ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்க உள்ளார்.

கடைசியாக, விக்ரமின் மகன் துருவ் விக்ரமினை வைத்து, வர்மா படத்தினை இயக்கிய நிலையில், அவர் உருவாக்கியப் படம் நன்றாக இல்லை என அப்படத்தினை வெளியிடாமல் இருந்ததால், பாலா பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS