தோனியுடன் சண்டையா? ஏன் ரெய்னா வெளியேறினார்? பரபரப்பு தகவல்கள்!

31 August 2020 விளையாட்டு
sureshrainaleft.jpg

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இருந்து எதற்கான, சுரேஷ் ரெய்னா வெளியேறினார் என்றப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் வீரர்கள் உட்பட, ஐபிஎல் அணியின் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றனர். அங்கு கிரிக்கெட் வீரர்களும், அணியின் நிர்வாக ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், திடீரென்று சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக விளையாடாமல், இந்தியாவிற்கு திரும்பி உள்ளார்.

அவர் ஏன் இந்த மாதிரி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளாமல், இந்தியாவிற்குத் திரும்பினார் என்றப் பரபரப்புத் தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. ரெய்னாவின் மாமா மரணம் அடைந்ததன் காரணமாக, அவர் ஐபிஎல் பயிற்சியில் தாமதமாக கலந்து கொண்டார். இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் பயிற்சி நடைபெற்றது ஏன் எனக் கேள்வி இருக்கின்றார். அதனால் தான், இவ்வாறு கொரோனா பரவியிருக்கின்றது எனக் கூறியிருக்குன்றார்.

அதே போல், இந்த பயிற்சியினை தோனி தான் சென்னையில் வைக்கச் சொன்னார் என, சிஎஸ்கே நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இதனால், அமீரகத்தில் தோனியுடன் வாக்குவாதத்தில் ரெய்னா ஈடுபட்டு உள்ளார். இதற்கடுத்தே, ரெய்னே கோபித்துக் கொண்டு, இந்தியா திரும்பி உள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், தோனிக்கு கொடுத்த அறையினை போல, தனக்கும் ஹோட்டல் ரூம் தர வேண்டும் என, நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். கொடுக்காத காரணத்தால், அவர் இந்தியா திரும்பியதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. சில நேரங்களில், வெற்றித் தலைக்கேறும் பொழுது இவ்வாறு நடக்கும். ரெய்னாவிற்கு இதன் மூலம் 11 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அவருடையத் தவறினை அவர் உணர்வார் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS