டி20 தொடரில் இருந்து வெளியேறினார் ஜடேஜா? சார்துல் தாக்கூர் அணியில் சேர்ப்பு!

05 December 2020 விளையாட்டு
jadejainjury.jpg

இந்திய அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்த ஜடேஜா, தற்பொழுது காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

நவம்பர் 4ம் தேதி அன்று இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில், முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. அப்பொழுது இந்தியாவின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட் செய்தார். அவர் பேட்டிங் செய்யும் பொழுது, பந்தானது நேரடியாக ஜடேஜாவின் இடது நெற்றிப் பகுதியினை தாக்கியது.

இதனால், ஜடேஜா காயமடைந்தார். தொடர்ந்து அவரால் விளையாட இயலவில்லை. இந்திய அணி பந்து வீசும் பொழுதும் ஜடேஜா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக, சாஹல் பந்து வீசும் பொறுப்பினைக் கவனித்துக் கொண்டார். இந்நிலையில், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் கூறினர். இதன் காரணமாக, இந்த டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக, டி20 அணியில் புதியதாக ஸ்ரதுல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS