கோ கொரோனா அப்பொழுது நோ கொரோனா இப்பொழுது! பாஜக அமைச்சர் பேச்சு!

28 December 2020 அரசியல்
ramdasathawale.jpg

கோ கொரோனா என்றதும் கொரோனா போனது, தற்பொழுது நாம் நோ கொரோனா என கூற வேண்டும் என, பாஜக எம்பி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.

பாஜக எம்பி ராம்தாஸ் அத்வாலே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், நான் கோ கொரோனா கோ என்ற வாசகத்தினை வெளியிட்டேன். அது அனைவரிடமும் பிரசித்தி பெற்றது. அதன் காரணமாக, கொரோனா வைரஸூம் ஒழிந்தது. இந்த சூழலில், நோ கொரோனா என்ற புதிய வாசகத்தினை வெளியிடுகின்றேன். ஏன் எனில், புதியதாக மாற்றமடைந்து உள்ள கொரோனாவும் அழிய வேண்டும். தற்பொழுது என்னருகிலேயே இந்த கொரோனா வைரஸானது வந்து விட்டது.

இருந்தாலும் பரவாயில்லை. என்னை அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நாம் விரைவில் கொரோனாவினை வெல்வோம் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS