ராம்போ லாஸ்ட் பிளட் திரைவிமர்சனம்!

22 September 2019 சினிமா
rambolastblood.jpg

ராம்போ வரிசையில் வெளியாகி உள்ள ஐந்தாவது பாகமாக, ராம்போ லாஸ்ட் பிளட் திரைப்படம், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

ப்பா! என்ன சண்டைக் காட்சிகள் என, நம்மை வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில், சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர் எனத் தைரியமாகக் கூறலாம். படம் முழுக்க, சண்டைக் காட்சிகள், அதிரடி பஞ்ச் டயலாக்குகள் என ஒரு மசாலாப் படத்திற்குத் தேவையான அனைத்தும் இப்படத்தில் உள்ளன.

தன்னுடைய நீண்ட நாள் பெண் தோழியான மரியானா மற்றும் அவளுடைய பேத்தியுடன் அமைதியாக, அரிசோனாவில் ஒரு குதிரைப் பண்ணையில் வாழ்ந்து வருகிறது. வாழ்க்கை மிக அமைதியாகவும், நிம்மதியாகவும் செல்கின்றது. இருப்பினும் அந்தப் பெண் குழந்தைக்கு, தன்னுடைய உண்மையானத் தந்தையிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என, அந்த இடத்தினை விட்டு மெக்சிகோ செல்கிறார். அங்கு, விபச்சாரக் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.

அவ்வாறு சிக்கிக் கொள்ளும் அவர் என்ன ஆனார்? ராம்போ என்ன செய்தார்? அந்தப் பெண் தன் தந்தையை சந்தித்தாரா? இல்லையா? வில்லைனப் பழி வாங்கினாரா ஹீரோ என, படத்தினை ஒன்றரை மணி நேரத்தில் தெளிவாகக் காட்டியுள்ளனர்.

இது ராம்போ பட வரிசையில் வெளியாகி உள்ள, ஐந்தாவது திரைப்படம் ஆகும். முதல் படத்தில் சில்வர்ஸ்டர் எப்படி சுறுசுறுப்பாக நடித்தாரோ, அதை இப்பவும் செய்துள்ளது, நம்மை வியக்கத்தான் வைக்கின்றது. எப்படி, 70 வயதிலும் இப்படி சண்டையிடுவது போல நடிக்க முடிகின்றது என்ற கேள்வியும் எழத் தான் செய்கின்றது. இப்படம் முழுக்க ரத்தம் தெறிக்கத் தெறிக்க சண்டையிடுகின்றனர்.

ஆனால், படத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க கூடாது என்றால், அது லாஜிக் தான். வழக்கம் போல, தன் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இத்திரைப்படத்தினை அவர் உருவாக்கியுள்ளார். படத்தில் முதல் அரை மணி நேரம், பெரிய அளவில் கதை இல்லை. ஆனல், போகப்போக படத்துடன் நாம் ஒன்றி விடுகிறோம். படம் நன்றாக உள்ளது என்றாலும், இதுவே கடைசிப் படமாக இருப்பது நல்லது. சில்வஸ்டருக்கு உடல் தளர்ந்துவிட்ட நிலையில், இன்னொரு ராம்போவை நம்மால் காணவும் முடியாது. ஏற்கவும் முடியாது.

ரேட்டிங் 3.2

HOT NEWS