கமல் தயாரிப்பில் ரஜினி! இயக்குநர் யார் தெரியுமா?

23 January 2020 சினிமா
kamal60function.jpg

தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். படத்தின் பூஜைகள் முடிந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தினை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக, நடிகை குஷ்புவும், நடிகை மீனாவும் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கின்றார்.

இதனையடுத்து, தலைவர் 169 என்றப் படத்தில் நடிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தினை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தினை விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தினை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார், என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடார் எனவும், இதுவே கடைசிப் படமாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தப் படத்திற்குப் பிறகும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பார் எனவும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS