மதுரையில் முதல் மாநாடு! எல்லாம் தயார்! சனிப் பெயர்ச்சிக்காக வெயிட்டிங்!

25 September 2019 சினிமா
rajinikanthspeech1.jpg

ரஜினிகாந்த் தன்னைப் பற்றி வரும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு, நான் பொறுப்பாக முடியாது என்று, எப்பொழுதோ கூறிவிட்டார். இருப்பினும், அவருடைய அரசியல் குறித்த வதந்திகளும், கிசுகிசுக்களும் குறையாமல் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நேற்று ரஜினிகாந்த், பிரபல அரசியில் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை சந்தித்தாராம். மும்பையில் நடைபெற்று வரும், தர்பார் சூட்டிங்கின் பொழுது, ரஜினிகாந்த்தும், பிரசாந்தும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம், வரும் ஜனவரி மாதத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டினை நடத்த உள்ளார் எனவும், அதில் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார் எனவும், சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாகப் பரவி வருகின்றன.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை, அவருடைய ரசிகர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ வதந்தியைப் பரப்புபவர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

HOT NEWS