சொன்னதைப் போல் வீடு கட்டிக் கொடுத்த சூப்பர்ஸ்டார்! நெகிழும் ரசிகர்கள்!

07 October 2019 சினிமா
rajinispeech.jpg

கலைஞானம் அவர்களின், 50வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் பொழுது, பேசிய ரஜினி அவருக்கு, ஒரு வீடு வாங்கித் தருவதாகக் கூறினார். சொன்ன படியே, தற்பொழுது வீடு வாங்கித் தந்துள்ளார்.

பைரவி படத்தினை, தயாரிப்பாளர் கலைஞானம் தயாரித்தார். அந்தப் படத்தின் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த ஆண்டு, அந்தப் படத்தினைத் தயாரித்த கலைஞானம் அவர்களின் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது, மேடையில் பேசிய நடிகர் சிவக்குமார், கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்று கவலைத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் பேசிய சிவக்குமார், தமிழக அரசிடம் அவருக்கு வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்பொழுது, மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார், அமைச்சர் சார் கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தரும் வாய்ப்பினை தமிழக அரசுக்குத் தர மாட்டேன். நானே என் சொந்த செலவில் ஒரு வீடு வாங்கித் தருவேன், பாக்யராஜ் சார், ஒரு வீடு பாருங்கள் என்று கூறினார்.

அது போலவே, தற்பொழுது சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள, வெங்கடேசன் நகரில், அவருக்கு வீடு ஒன்றினை வாங்கித் தந்துள்ளார். ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள அந்த வீடு, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைதளத்தில் அமைந்துள்ளது. இன்று காலை, அவருடைய வீட்டிற்குச் சென்ற ரஜினி, அவருடனும், அவருடைய குடும்பத்தாருடனும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டு இருந்தார்.

இதனை ரஜினியின் ரசிகர்கள் தற்பொழுது, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS