கடவுள் நம்பிக்கையில் அதிமுகவும் பாஜகவும் ஒன்று தான்! பிகேவினை நம்பி தான் ஸ்டாலின்!

05 November 2020 அரசியல்
ktrajenthrabhalaji.jpg

கடவுள் நம்பிக்கையினைப் பொறுத்த மட்டில், பாஜகவும் அதிமுகவும் ஒன்று தான் என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ஆவின் சார்பாக கடந்த ஆண்டு 80,000 கிலோ இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு 1,00,000 கிலோ இனிப்புகள் விற்பனை செய்யப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 500 கிராம் இனிப்பானது 375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

திமுகவும், முக ஸ்டாலினும் பிரசாந்த் கிஷோரை நம்பித் தான் உள்ளனர் எனவும், கடவுள் நம்பிக்கையினைப் பொறுத்தமட்டில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டுமே ஒன்று தான் எனவும் அவர் பேசியுள்ளார்.

HOT NEWS