சென்னை சூப்பர் ஙிக்ஸ் அணிக்காக, நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விளையாட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் பிரதான கிரிக்கெட் போட்டித் தொடர்களுள் ஒன்றாக மாறி இருப்பது ஐபிஎல் போட்டி. இந்த ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச முன்னணி வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, ஆரம்பம் முதல் சுரேஷ் ரெய்னா விளையாடி வருகின்றார். அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவில்லை.
அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டப் பிரச்சனைக் காரணமாகவும், அணியில் சரியான மரியாதை இல்லை என்றக் காரணத்தினாலும் அவர் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தனக்கும் தோனிக்கும் ஒரே மாதிரியான ஹோட்டல் ரூம் வேண்டும் என்று ரெய்னா பேசியதாகவும், ரூம் வழங்காத காரணத்தால் அவர் இந்தியா திரும்பி விட்டார் எனவும் தகவல்கள் தெரவித்தன. இந்த சூழலில், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் எனப் பலரும் பேசி வந்தனர்.
ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில், வீரர்கள் ஏலம் நடைபெறாதக் காரணத்தால், சிஎஸ்கே அணிக்கு விளையாட மீண்டும் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.