7,00,000 இந்திய ரயில் பயனர்களின் தகவல்கள் கசிந்தன!

25 August 2020 தொழில்நுட்பம்
programming-1.jpg

இந்தியாவினைச் சேர்ந்த ரயில்யாத்ரா என்ற செயலியின், 7,00,000 பயனர்களின் தகவல்களும் கசிந்துள்ள அதிர்ச்சித் தகவல், வெளியாகி உள்ளது.

இந்தியாவின் ரயில்யாத்ரா என்ற செயலியானாது, குறைந்த விலையில் ரயில் டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகளுக்கான கூப்பன்கள், சலுகைகள் முதலியவற்றை வழங்கி வருகின்றன. இந்த செயலியில் பலரும் பயனர்களாக இணைந்துள்ளனர். அவ்வாறு இணைவதன் மூலம், மேலும் பல சலுகைகளைப் பெற இயலும். அப்படிப்பட்ட செயலியின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளன.

இந்த தகவல்கள் கசிவில் மொத்தம் ஏழு லட்சம் பயனர்களின் தகவல்கள் கசிந்துள்ளன. அதில், பயனர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், பணப்பரிமாற்ற எண், டிக்கெட் விவரங்கள், பாஸ்வேட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு நம்பர்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் கசிந்துள்ளன. இந்த செயலியில் இருந்த 43 ஜிபி டேட்டாவும் கசிந்துள்ளன.

அதுமட்டுமின்றி, இதிலிருந்த மொத்தம் 3 கோடியே எழுபது லட்சத் தகவல்கள் கசிந்துள்ளதை, அந்நிறுவனம் கசிந்துள்ளது. தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளதைக் கண்டறிந்த அந்த நிறுவனம், தற்பொழுது இந்தியாவின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீமினை அணுகி இருக்கின்றது. அந்த அமைப்பு, இதன் சர்வரை டிஸ்கணெக்ட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS