மீண்டும் தலைவராகின்றார் ராகுல் காந்தி! ஜனவரியில் பதவியேற்க உள்ளதாக தகவல்!

20 December 2020 அரசியல்
rahul-gandhi-congress.jpg

காங்கிரஸ் கட்சியின் தலைவராகு மீண்டும் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மாபெரும் தோல்வியினை சந்தித்தது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த ராகுல் காந்தி, தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தலைமையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சியானது செயல்பட்டு வருகின்றது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்ற தேர்தல்களில், கடும் தோல்விகளை அடைந்து வருகின்றது. இந்தத் தோல்விகளுக்கு முக்கியக் காரணமாக, கட்சியின் தலைமை பார்க்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களே, கட்சியின் தலைமையினை மாற்றாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றுக் கூற ஆரம்பித்தனர்.

இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் இருப்பதாக தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டன. இதனை முன்னிட்டு, தற்பொழுது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் சோனியா காந்தி. இந்தக் கூட்டத்தினைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவராக பலரும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். அதில், காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலானோர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக விருப்பம் தெரிவித்து உள்ளார் எனக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஜனவரி மாதத்தின் இறுதியில் ராகுல் காந்தி, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அவரிடம் அதற்கு ஒப்புதல் கேட்டதாகவும், ராகுல் காந்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால், அவர் மீண்டும் தலைவராவது உறுதியாகி உள்ளது.

HOT NEWS