2022-ல் உலக்கோப்பை நடக்கப்போவது கத்தார் எனும் சொர்க்கத்தில்

28 June 2019 விளையாட்டு
qatar.jpg

2022க்கான உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஊழல் புகார்கள், பல எதிர்ப்புகள் என்று எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எதையுமே சட்டை செய்யாமல் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.

மைதானங்கள்

மைதானங்களைத் தயாரிப்பது தான் மிக முக்கிய மற்றும் கடிமையான ஒரு வேலையாகும். கத்தார் மொத்தம் 10க்கும் மேற்பட்ட சர்வதேச காலபந்தாட்ட மைதானங்களை வடிவமைத்தும் உருவாக்கியும் வருகிறது.

அல்-ஹராபா alharapa.jpg

இதனை ரிப்பன் ஸ்டேடியம் என்றேக் கூறலாம். இதன் வெளிப்புறம் பார்ப்பதற்கு பல அழகிய ரிப்பன்களால் சுற்றியுள்ளதுப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்-ஹோர் alkhorstadium.jpg

முற்றிலும் வித்தியாசமாக சங்கு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், இப்பொழுதே உலகளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.

அல்-ரய்யான் alrayyanstadium.jpg

மைதானத்தைச் சுற்றிலும் LCD திரையில் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் நடக்கும் போட்டியை வெளியில் இருப்பவர்கள் எந்த ஒரு தடையுமின்றி எளிதில் காணும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அல்-ஸாமால் alshamalstadium.jpg

கடற்கரை அருகே கட்டப்பட்டு வரும் இந்த மைதானம், காண்பவர்களின் கண்கள் குளிரும் வகையில், இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கும் என இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

அல்-வாக்ராஷ் alwakrahstadium.jpg

முற்றிலும் வித்தியாசமாக, இதனை உலகில் எங்கும் இல்லாத வண்ணம் உருவாக்க வேண்டும் என கத்தார் விளையாட்டமைப்பு கூறியுள்ளதை அடுத்து, கடின உழைப்புடன் இதனை இரவுப் பகலாக உருவாக்கி வருகின்றனர்.

தோஹாஃபோர்ட் dohaportstadium.jpg

கடலின் நடுவே குட்டித் தீவுப் போன்று இதனை உருவாக்கி வருகின்றனர். இந்த மைதானம் கண்டிப்பாக வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.

எஜூகேசன் ஷிட்டி educationcitystadium கலிஃபா இன்டர்நேஷனல் khalifainternationalstadium லுசைல் ஐகானிக் lusaillconicstadium

இந்த மைதானம் மிக அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. இந்த மைதானம் பார்ப்பதற்கு ஒரு பெரிய மால் போன்று காட்சியளிக்கும் என இதனை வடிவமைக்கும் பொறியாளர்கள் நம்புகின்றனர்.

கத்தார் யுனிவர்சிட்டி qataruniversitystadium

படத்தில் உள்ளதைப் போல், காளான் குடைகளுக்கு இடையில் பூத்த பூவைப் போன்று இதனை உருவாக்கி வருகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் சிட்டி sportscitystadium

இதுவே உலகின் முதல் அதி நவீன மைதானமாக இருக்கும் என, கத்தார் உலகக் கோப்பையை நடத்தும் அமைப்புக் கூறியுள்ளது.

உம் ஸ்லால் ummslalstadium

முழுவதும் தங்க நிறத்தில் காட்சி அளிக்க இருக்கும் இந்த மைதானம், கண்டிப்பாக இறுதிப் போட்டியை நடத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவ்வாறு உருவாக்கப்படும் மைதானங்கள் அனைத்துமே கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், கத்தாரில் இருக்கும் வெப்பம் மிகுந்த சூழ்நிலையே ஆகும்.

எது எப்படி இருப்பினும், 2022-ல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள், பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

HOT NEWS