சைக்கோ திரைவிமர்சனம்

26 January 2020 சினிமா
psychoreview.jpg

மிஷ்கின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சைக்கோ.

இந்தப் படத்திற்குச் செல்லும் முன், ஒரு விஷயத்தினை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மனம் பலவீனமானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் அதிக பீபீ உள்ளவர்கள் என இவர்களில் யாராக இருந்தாலும், இந்தப் படத்திற்கு போகும் முன், சற்று யோசித்துச் செல்வது நல்லது. அந்த அளவிற்கு, ஒரு மிக கொடூரமான படமாக இது உருவாகியுள்ளது.

ஹாலிவுட்டில், ஷா என்ற ஒரு சைக்கோ படத்தின் பல பாகங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் சைக்கைப் போடு போட்டுள்ளன. அதன் கதை வேறு. இந்த சைக்கோ படத்தின் கதை வேறு. ஆனால், இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவை தான் கொடூரம். எந்த அளவிற்கு கொலையை கொடூரமாகக் காட்ட இயலுமோ, அந்த அளவிற்கு மிகக் கொடூரமாக காட்டியிருக்கின்றனர் இந்த சைக்கோ படத்தில்.

கண் தெரியாதவராக நடிகர் உதயநிதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனியார் ரேடியோ நிறுவனத்தில் வேலை செய்யும் அதிதி ராவ் ஹைதாரி இருக்கின்றார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு நாள் இருவரும் சந்திக்க வேண்டிய தருணத்தில், அதிதி கடத்தப்படுகின்றார். அப்பொழுது, பெண்களைக் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ ஒருவனால், அதிதி கடத்தப்படுகின்றாரா என சந்தேகம் ஏற்படுகின்றது. இதனை அடுத்து, போலீசில் புகார் கொடுக்கின்றார். தன்னுடைய காதலியை, கண் தெரியாத உதயநிதியும் தேடுகின்றார்.

கதாநாயகி கிடைத்தாரா, யார் அந்த சைக்கோ வில்லன். அவன் ஏன் பெண்களைக் கடத்தி, கொடூரமாக கொலை செய்கின்றான். அவனைப் போலீசார் பிடித்தார்களா என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தின் ஒளிப்பதிவும், இசையும் படத்தினைத் தாங்கும் தூண்கள் என்றால், படத்தின் கதையும், திரைக்கதையும் இப்படத்தின் பேஸ்மெண்ட் என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு, மிக நேர்த்தியான படத்தினை இயக்குநர் மிஸ்கின் கொடுத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் கேட்க கேட்க நன்றாக உள்ளது. ஆனால், படத்தின் பின்னணி இசையில் தான் எப்படிப்பட்ட இசைக் கலைஞன் என்பதை, இசைஞானி இளையராஜா நிரூபித்து உள்ளார். இந்தப் படம் நிச்சயமாக, தமிழ் திரில்லர் படங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்றுக் கூறினால், மிகையாகாது.

மொத்தத்தில் சைக்கோ ஒரு கொடூரமான ஹைக்கூ

ரேட்டிங் 2.9

HOT NEWS