தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு, கேல் ரத்னா விருதினை, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்தியா முழுக்க உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும், ஹாக்கி வீரர் மேஜர் தயான்ந்த்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி அன்று நடத்தப்படுகின்றது. இதற்காக, சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டிற்கான வீரர்களின் பட்டியலையும், மத்திய அரசு வெளியிட்டது.
அதில், தமிழகத்தின் தடகள வீரர் மாரியப்பனுக்கும் விருது வழங்கப்பட உள்ளதாக, அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று, 27 வீரர்களுக்கு அர்ஜூனா விருதும், 15 பேருக்கு தயான்சந்த் விருதும் வழங்கப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, தமிழகத்தின் பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டென்னிஸ் வீராங்கணை மணிகா பத்ரா மற்றும் மல்யுத்த வீராங்கணை வினேஸ் போகாத் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த விருது வழங்கும் விழாவானது, வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடைபெற்றது. இதற்காக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த பிர்தேயக அறையில் அமர்ந்து, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். ரோகித் ஷர்மா மற்றும் வினேஷ் போகாத் தவிர மற்ற அனைவரும் தங்களுடைய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.