பொன்னம்பலம் உருக்கம்! ரசிகர்கள் தான் உதவி செஞ்சாங்க! நாயா கூட மதிக்கல!

29 July 2020 சினிமா
ponambalam.jpg

என்னை யாரும் நாயாக கூட மதிக்கவில்லை எனவும், ரசிகர்கள் தான் உதவி செய்தார்கள் எனவும் நடிகர் பொன்னம்பலம் தெரிவித்து உள்ளார்.

திடீரென்று சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவ உதவி வழங்க அவருடைய குடும்பத்தார் முடிவு செய்தனர். மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காததால், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா உள்ளதா என சோதனை செய்தனர் எனவும், அவருக்கு நோய் தொற்று இல்லை என்று பின்னர் முடிவு வந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

34 வருடத்திற்கு முன் 5000 ரூபாயினை முன்பணமாகக் கட்டி, ஸ்டன்ட் யூனியனில் உறுப்பினராக சேர்ந்தேன். ஆனால், தற்பொழுது நான் உறுப்பினர் இல்லை, சந்தா கட்டவில்லை என, எனக்கு வர வேண்டிய ஓய்வூதியத் தொகையினை அவர்கள் வழங்கவே இல்லை. என்னுடைய சக நடிகர்களும், ரசிகர்களுமே 50, 100 என வழங்கி ஒரு லட்ச ரூபாய் வரை தேற்றிக் கொடுத்தனர்.

நடிகர் அர்ஜூன், தனுஷ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் எனக்கு உதவி செஞ்சாங்க. நடிகர்கள் எனக்கு உதவி செஞ்ச காரணத்தால, ரசிகர்கள் அனுப்பிய பணத்தினை ஸ்டன்ட் யூனியனுக்கு வழங்கி விட்டேன். என்னைப் போல கஷ்டப்படும் பிற கலைஞர்களுக்கு அது உதவியாக இருக்குமே என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS