ரஜினிகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்!

10 December 2020 சினிமா
rajinipressmeet.jpg

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பானது, தற்பொழுது வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செய்தியாளர்களைச் சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும், ஜனவரி ஒன்றாம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். இந்த சூழலில், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, தமிழக அரசு கூடுதலாக 15 போலீசாரை அவருடைய வீட்டிற்கு அனுப்பியது.

ஆனால், அப்பகுதியில் வசித்தவர்களுக்கு அது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுமக்கள் அப்பகுதியில் சகஜமாக நடமாட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வீட்டிற்கு தற்பொழுது, ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த செலவிலேயே 30க்கும் மேற்பட்ட கேமிராக்களைப் பொருத்தியுள்ளார். இதனால், அவருடையப் பாதுகாப்பானது கூடுதலாகி உள்ளது. இந்தப் போலீசார் அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக குவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய சிரமத்தினை ரஜினிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தற்பொழுது தனக்கு வழங்கப்பட்டக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பினை வாபஸ் பெற்று உள்ளார். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து, காவல்துறையும் தன்னுடையக் கூடுதல் பாதுகாப்பினைத் திரும்பப் பெற்று உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS