பெண்குயின் திரைவிமர்சனம்!

20 June 2020 சினிமா
penguinreview.jpg

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இரண்டாவது தமிழ் படமாக வெளியாகி உள்ளது பெண்குயின். உடல்எடையைக் குறைத்த பின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள முதல் படம் இது தான். பார்ப்பதற்கு, அவர் கீர்த்தி சுரேஷ் போலவே இல்லை. அவருடையக் குரலை வைத்துத் தான், இது கீர்த்தி என்றே கண்டுபிடிக்க முடிந்தது.

அந்த அளவிற்கு, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். படத்திற்கு வருவோம். ஏழு மாத கர்ப்பிணியாக படம் முழுக்க நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு அஜய் என்ற குழந்தை இருக்கின்றது. அது ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போகின்றது. அப்பொழுதில் இருந்து கீர்த்திக்கும், அவருடைய கணவருக்கும் மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

குழந்தை இறந்து இருக்கும் என, போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், கீர்த்தியால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் குழந்தை உயிருடன் தான் இருக்கும் என்று நம்புகின்றார். இதனால், கணவர் இவரை விவாகரத்து செய்கின்றார். ஒரு நாள் குழந்தை மீண்டும் வருகின்றது. அப்பொழுது, கீர்த்திக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடந்து விட்டது.

அந்த திருமணத்தால் கர்ப்பமாகவும் இருக்கின்றார். அந்த திரும்பி வந்த அஜய் குழந்தையை கடத்தியது யார், ஏன் கடத்தினர். கீர்த்திக்கும், அந்தக் கடத்தல் செய்பவருக்கும் என்ன சம்பந்தம், படத்தின் முடிவு என்ன என்பதை கூறியிருக்கின்றனர். படத்தில், பெரிய அளவில் பாடல்கள் இல்லை. தெளிவானக் கதையும் இல்லை. திடீரென்று வரும் கதாப்பாத்திரங்கள், நம்மை பெரிய அளவில் ஈர்க்கவும் இல்லை.

படம் முழுக்க, சோகமான முகத்தில் வரும் கீர்த்தி, தன்னுடைய நடிப்பினை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கின்றார். பெரும்பாலான காட்சிகள், கொடைக்கானல் பனியில் எடுக்கப்பட்டு உள்ளது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், சலிப்பை தந்துவிடுகின்றது. சொதப்பலான திரைக்கதை, பக்குவம் இல்லாத இயக்கம், கதையில் புதுமை என குழந்தைகளைப் பயன்படுத்தி வன்முறை என படம் நம்மை ஈர்க்க மறுக்கின்றது.

என்னடா இந்தப் படத்திற்காடா இவ்வளவு பில்டப் என்ற, படம் பார்த்தவர்களால் கண்டிப்பாக கூறாமல் இருக்க முடியாது. தமிழ் சினிமாவின் திரைப்படங்கள், ஓடிடி தளத்தில் வெளியானால் திரைத்துறை அழிந்தேவிடும் என்றுப் பலர் தங்களுடையக் கருத்தினை தெரிவித்து வந்தனர். உண்மையில், இது போன்ற படங்கள் ஓடிடியில் வருவதற்கு காரணம், திரையறங்கில் காக்கா கூட வந்து பார்க்காது என்பதால் தான். இது போன்ற படங்களால் ஓடிடிக்கு தான் ஆபத்து.

மொத்தத்தில் பெண்குயின் திணறல்.

ரேட்டிங் 1.4/5

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS