தண்ணி இல்லாம குளிப்பாட்டி, டவல் இல்லாம துவட்டி விட்டுருவேன்! பட்டயக் கிளப்பும் பட்டாஸ் ட்ரெய்லர்!

07 January 2020 சினிமா
pattas12.jpg

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

இந்தப் படத்தினையும், கொடி படத்தினை இயக்கிய துரை செந்தில்குமாரே இயக்கி உள்ளார். இப்படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்து இருக்கின்றனர். இப்படத்தில், புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு, நடிகை சினேகா தனுசுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என, ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலை அறிந்தவராகவும், மாடர்ன் பாக்ஸிங் வீரராகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இதில், தனுஷிற்கு இரண்டு கெட்டப்களா அல்லது இரட்டைக் கதாப்பாத்திரங்களா என்ற சஸ்பென்ஸை இந்த ட்ரெய்லரிலும் கூறாமல் மறைத்தே வைத்திருக்கின்றனர்.

HOT NEWS