ஐபிஎல் ஸ்பான்சர்சிப்பினை பெற பதஞ்சலி மும்முரம்!

12 August 2020 அரசியல்
patanjaliipl.jpg

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்சிப்பினை கைப்பற்றும் முயற்சியில், பதஞ்சலி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், சீனப் பொருட்களின் மீது இந்திய அரசு கடும் கட்டுப்பாடுகளையும், வரியினையும் விதித்து வருகின்றது. இதனையொட்டி, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ நிறுவனம் விலக்கப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, பிசிசிஐ அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்குமாறு, ஜியோ நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதனை ஜியோ நிறுவனம் மறுத்துவிட்டது. அந்த நிறுவனம் ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓனராக இருப்பதாகவும், பல நிறுவனங்களுக்கு ஸ்பான்சராக இருப்பதாலும் இதனை அந்நிறுவனம் ஏற்கவில்லை.

இந்த சூழ்நிலையில், அடுத்த 4 மாத காலத்திற்கான ஐபிஎல் ஸ்பான்சராக இருக்க விரும்புபவர்கள் தங்களுடைய விருப்பத்தினை தெரிவிக்கலாம் என்றுக் கூறியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் குறித்த ஆவணத்தினைப் பெற ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாள் என்றும், இந்த ஒப்பந்தத்தினை அடைந்தவர்களின் பெயர் ஆகஸ்ட் 18ம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தமானது வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகக் கூடியது.

இதில் தற்பொழுது பல இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, யோகா ஆசிரியரான பாபா ராம்தேவ் இருக்கும் பதஞ்சலி நிறுவனம், கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS