ஆக்ஸ்போர்டு மருந்து பாதுகாப்பானது! இங்கிலாந்து அறிவிப்பு! விரைவில் கொரோனாவில் இருந்து விடுதலை!

25 November 2020 அரசியல்
covid19medicine1.jpg

உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த, ஆக்ஸ்போர்ட் மருந்து பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலானது, தற்பொழுது வெளியாகி உள்ளது.

உலகளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது கொரோனா வைரஸ். தற்பொழுது வரை 6 கோடி பேர், இந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், இந்த வைரஸினை எதிர்க்கும் பொருட்டு, பல நாடுகள் தடுப்பூசி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதில், ரஷ்யா தன்னுடைய தடுப்பூசியினை வெளியிட்டது. மக்களின் பயன்பாட்டிற்கும் அனுமதி அளித்தது.

அமெரிக்காவும் பிபிசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் மருந்துகள், சிறப்பாக செயல்படுகின்றன என கூறியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவும் தற்பொழுது 3 தடுப்பூசி மருந்துகளை, மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், ஜெர்மனியின் ஆஸ்ட்ரோஜெனிக்கா எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து, புதியதாக தடுப்பூசி ஒன்றினை தயாரித்தது.

அதனை கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்பொழுது வரை ஆய்வு செய்து வந்தது. அந்த ஆய்வில் ஒருவர் மரணமடைந்தார். இந்த சூழலில், இந்த மருந்து குறித்து தற்பொழுது இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹேன்காக் தகவல் அளித்துள்ளார். நேற்று, ஸ்கை நியூஸ் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ஆஸ்ட்ரோஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள மருந்தின் முடிவானது வெளியாகி உள்ளது.

இந்த மருந்தானது, தற்பொழுது வரை 90% வெற்றியினைப் பெற்றுள்ளது. சரியான விதத்தில் இதனைப் பயன்படுத்தினால், இந்த வெற்றியானது கிடைக்கின்றது. கொரோனா வைரஸினை இந்த மருந்து தடுப்பதோடு, பரவாமலும் இருக்க உதவுகின்றது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், தற்பொழுது வரை 10 கோடி டோஸிற்கான ஆர்டர்கள் வந்துள்ளன எனவும் கூறியுள்ளார். இதனால், விரைவில் உலகமெங்கும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தானது பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகின்றது.

HOT NEWS