டெல்லியினை நோக்கி ஒரு லட்சம் டிராக்டர்கள்! கலங்கும் டெல்லி!

17 January 2021 அரசியல்
delhitractormarch.jpg

டெல்லியில் வருகின்ற குடியரசுத் தினத்தன்று மிகப் பெரிய டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மூன்று திருத்தப்பட்ட வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்குப் பலரும் தங்களுடையக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தற்பொழுது டெல்லியின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, அங்கு பெய்து வருகின்ற கடும் மழை, மோசமான குளிருக்கும் மத்தியில் போராடி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட வயதான விவசாயிகள் கடும் குளிரின் காரணமாக பலியாகி உள்ளனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த சூழலில், பலகட்டப் பேச்சுவார்த்தையினை மத்திய அரசு, போராடி வருகின்ற விவசாயிகளுடன் மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

மத்திய அரசிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்கின்ற நோக்கில், மாதிரி டிராக்டர் பேரணியினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திக் காட்டினர். வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசுத் தினமானது கொண்டாடப்படுகின்றது. அன்று தங்களுடைய டிராக்டர் பேரணியினை நடத்த உள்ளதாக, விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேரணியானது, குடியரசு தின அணிவகுப்பிற்கு போட்டியாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில், அது இந்தியாவிற்கு அவமானம் எனப் பலரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், கடந்த வாரம் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு இடைக்கால தடை விதித்து உள்ளது உச்சநீதிமன்றம்.

HOT NEWS