ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?

26 February 2020 விளையாட்டு
olympic2020.jpg

இன்னும், இரண்டு மாதத்திற்குள் கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜூலை மாதம்24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை, ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், தற்பொழுது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தப் போட்டிகள் நடந்தால் தான் நடக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து, ஒலிம்பிக் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது மே மாதத்திற்குள், உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாவிட்டால், கண்டிப்பாக, இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியானது, ரத்து செய்யப்படும் எனவும், வேறு இடத்தில் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஜப்பானிற்கு பெரிய அளவிலான ஆதாயம் தட்டிப் பறிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில், இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற்றால், சுற்றுலா பயணிகள், போட்டிகள் ஒளிபரப்பு என, பல விதத்திலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS