அடுத்த ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கிடையாது! நிர்வாகம் முடிவு!

13 August 2020 விளையாட்டு
iplauction.jpg

இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் போட்டியானது, வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால், தற்பொழுது புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது, கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டே இருப்பதால், இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியுள்ளனர். வருகின்ற செப்டம்பர் மாதம், இந்தப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணியினைச் சேர்ந்த வீரர்கள், தங்களுடைய அணிக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அமீரகம் சென்று விளையாடுகின்றனர். இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியானது, வருகின்ற 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்காக விளையாடும் வீரர்களை, இந்த ஆண்டு இறுதியில் ஏலத்தில் விடுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிந்த நான்கு மாதங்களுக்குள் அடுத்த ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டுக்கான வீரர்களை ஏலத்தில் விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, வீரர்களை ஏலத்தில் விட வேண்டாம் என ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

HOT NEWS