நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி தோல்வியினைத் தழுவியது.
முதல் ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இன்று ஆக்லாண்டில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சினை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஐம்பது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு, 273 ரன்கள் குவித்தது. குப்தில் 79(79), நிக்கோல்ஸ் 41(59), டாம் ப்ளன்டெல் 22(25), ரோஸ் டெய்லர் 73(74), டாம் லாதம் 7(14), ஜேம்ஸ் நீஸம் 3(5), மார்க் சாப்மன் 1(2), டிம் சௌத்தீ 25(24) ரன்களை குவித்தனர்.
இந்தியாவின் சார்பில், சாஹல் மூன்று விக்கெட்டுகளையும், தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 48.3 ஓவரில், அனைத்து விக்கெகட்டுகளையும் இழந்து, 251 ரன்களை மட்டுமே குவித்தது. பிரித்வீ ஷா 24(19), மயங்க் அகர்வால் 3(5), விராட் கோலி 15(25), ஷ்ரேயஸ் ஐயர் 52(57), கேஎல் ராகுல் 4(8), கேதர் ஜாதவ் 9(27), ரவீந்திர ஜடேஜா 55(73), தாக்கூர் 18(15), நவ்தீப் சைனி 45(49), சாஹல் 10(12) ரன்கள் எடுத்தனர்.<
நியூசிலாந்து அணி வீரர்கள் பென்னட், சௌத்தீ, ஜேமீசன் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நீசம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் கையில் ஜேமீசன் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.