ஒவ்வொரு பிளாக் ஹோலுக்குள்ளேயும் ஒரு யுனிவர்ஸ் இருக்கலாம்! புதிய கணிப்பு!

24 March 2020 தொழில்நுட்பம்
blackhole.jpg

விந்தைகள் நிறைந்த இந்த விஞ்ஞானி உலகத்தில், நாளுக்கு நாள் விரிவடையும் விஷயமாகவே இந்த விண்வெளி ஆய்வுகள் உள்ளன. அப்படி ஒரு ஆய்வு முடிவு ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிசிக்ஸ் லெட்டர் பி என்றப் பெயரில் பத்திரிக்கை ஒன்று வெளியாகி வருகின்றது. அதில், இண்டியானா யுனிவர்சிட்டியின் இயற்பியலாளர் நிக்கோடிம் பாப்லாஸ்கி ஒரு கோட்பாட்டினை வெளியிட்டுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதன்படி, ஒவ்வொரு பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைக்குள்ளேயும், ஒரு யுனிவெர்ஸ் எனப்படும் பிரபஞ்சம் இருக்கலாம் எனவும், அதனைத் தொடர்பு கொள்ளும் வார்ம்ஹோல் (வாசல்துளை) ஆக, இந்த பிளாக்ஹோல்கள் இருக்கின்றன எனவும் கூறுகின்றார். இதற்கு, ஐன்ஸ்டீனின் கணிதக் கோட்பாட்டினையும் ஆதாரமாக முன்வைக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு பிளாக் ஹோலுக்குப் பின்னாலும், ஒரு வொயிட் ஹோல் இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், அவைகள் பற்றிய ஆராய்ச்சியானது தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். பொதுவாக, அனைத்து செயல்களும் ஒரு மையப் புள்ளியினை ஆதாரமாக வைத்து செயல்படும் எனவும், ஆனால் இந்த பிளாக் ஹோல்களுக்கு, மையப் புள்ளி என்பது கிடையாது எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS