கேரளாவிற்கு வந்த பறவை காய்ச்சல்! கோழிக் கறி விலை குறையுமா?

05 January 2021 அரசியல்
chicken.jpg

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தினைத் தொடர்ந்து கேரளாவிற்கும் தற்பொழுது பறவைக் காய்ச்சலானது பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் பட்டை தலை வாத்துக்கள் 5ற்கும் மேலாக, ஒரே இடத்தில் மரணமடைந்து கிடந்தன. இதனைப் பரிசோதனை செய்ததில், வெளிநாட்டில் இருந்து வந்தப் பறவைகள் மூலம் இவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இவைகளில் ஹெச்5என்1 என்ற ஏவியன் இன்புளுயன்சா என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுகாதார அவசரநிலையானது, பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வாத்துக்களைப் போல கேரளாவிலும் பல ஆயிரம் வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளன. இதனை ஆய்வு செய்ததில், அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புலா பகுதிகளில் வளர்க்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான வாத்துக்களை கொல்ல, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. தற்பொழுது வரை, இந்தப் பறவைக் காய்ச்சலானது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, இமாச்சலப் பிரதேசத்தில் இந்த வைரஸானது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் கறிக் கோழியின் விலையானது வெகுவாகக் குறையும் என கூறப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS