சீனாவில் பரவும் புதிய நோய்! நெடுங்காலம் இருக்குமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

20 September 2020 அரசியல்
bacteria-infection.jpg

சீனாவில் இருந்து புதிதாக ப்ரூசெல்லாசிஸ் என்ற புதிய வகை பாக்டீரியாத் தொற்றானது, வேகமாகப் பரவி வருகின்றது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி உலகம் முழுவதும் தற்பொழுது வரை பரவி வருகின்றது. இந்த வைரஸால் பல லட்சம் பேர், உலகம் முழுவதும் பலியாகி உள்ளனர். இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரைக் கோடிக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்த வைரஸினை சீனா தான் உருவாக்கியது என அமெரிக்கா உட்பட, உலகின் பல நாடுகள் சீனாவினைக் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், சீனா தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டினை மறுத்து வருகின்றது. இவ்வளவு பிரச்சனைகள் இன்னும் நிலவி வருகின்ற சூழ்நிலையில், சீனாவில் புதிதாக பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது. அந்த நாட்டில் ப்ரூசெல்லாசிஸ் என்ற புதிய வகை பாக்டீரியா தொற்றானது, வேகமாகப் பரவி வருகின்றது.

சீனாவின் கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவில், இந்த பாக்டீரியத் தொற்றினை அம்மாகாண சுகாதாரத்துறை கண்டறிந்து உள்ளது. இந்த பாக்டீரியத் தொற்றால் தற்பொழுது வரை, சுமார் 3245 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அம்மாகாண அரசுக் கூறியுள்ளது. இதனால், அம்மாகாணத்தில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பாக்டீரியத் தொற்று உள்ளவர்களுக்கு முதலில் தசை வலி, தலைவலி, காய்ச்சல், உடல் மிகவும் சோர்வாக இருத்தல் போன்றவை ஏற்படும்.

இந்த பாக்டீரியத் தொற்றால் ஏற்படும் காய்ச்சல் மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்த பாக்டீரியத் தொற்று ஏற்படும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் அபாயம் ஏற்படும். இது உடலில் உள்ள உறுப்புக்களை வீக்கமடையச் செய்யும் எனவும், நீண்ட நாட்களுக்கு உடலில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. இந்த நோயானது, மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது எனவும், விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

HOT NEWS