உசைன் போல்ட்டிற்கு பெண் குழந்தைப் பிறந்தது! போல்ட் மகிழ்ச்சி!

09 July 2020 விளையாட்டு
usainboltbaby.jpg

உலகின் நம்பர் ஒன் ஓட்டப் பந்தைய வீரரான உசைன் போல்ட்டிற்கு, பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

ஜமைக்கா நாட்டின் பிரபல நட்சத்திர ஓட்டப் பந்தைய வீரர் உசைன் போல்ட். இவர் ஒலிம்பிக் போட்டிகளில், எட்டு தங்கப் பதக்கங்களையும், உலக தடகளப் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்களையும் வென்றவர் ஆவார். அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து கடந்த ஒலிம்பிக் போட்டியுடன் விடைபெற்றார்.

அவருக்கும், கசி பென்னட்டிற்கும் தற்பொழுது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உசைன் போல்ட், என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த சிறந்த நாளை நான் உன்னுடன் கழித்தேன். உன்னை மகிழ்ச்சியாகவும், சிரித்த முகத்துடனும் பார்த்துக் கொள்வதே என் வாழ்வின் லட்சியம் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மகள் ஒலிம்பிய லைட்னிங் போல்ட்டுடன் இணைந்து, புதிய வழாக்கையினைத் தொடங்குவோம் என, தன் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HOT NEWS