புதிய ஐபிஎல் அணி! போட்டி போடும் பிரபலங்கள்! யாருக்கு ஜாக்பாட்!

02 December 2020 விளையாட்டு
jayshah.jpg

2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், கூடுதலாக ஒரு ஐபிஎல் அணி இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டாகப் பார்க்கப்படுவது கிரிக்கெட் தான். தேசிய விளையாட்டான ஹாக்கிக்குக் கூட இவ்வளவு மவுசு கிடையாது. அப்படிப்பட்ட கிரிக்கெட்டில், ஐபிஎல் போட்டிகளானது ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் தற்பொழுது வரை, 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளே, மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதியதாக ஒன்பதாவது கிரிக்கெட் அணியினை, அறிமுகம் செய்ய உள்ளது ஐபிஎல். இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கேரளாவின் நகைக்கடை அதிபர் மோகன்லால் மற்றும் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோர் இடையில், கடும் போட்டியானது நிலவி வருகின்றது. இதில், கேரளாவினைக் காட்டிலும் குஜராத்தில் தான், மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடி மோதிரா என்ற இந்தியாவின் மிகப் பெரியக் கிரிக்கெட் மைதானத்தினை திறந்து வைத்துள்ளார்.

அந்த மைதானத்தினைக் காரணமாக வைத்து, இந்த மாநிலத்திற்கு கிரிக்கெட் அணி ஒதுக்கப்படும் எனவும், அதனை ஜெய் ஷா உருவாக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில், வருகின்ற 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், நிச்சயம் ஒன்பது அணிகளை எதிர்பார்க்கலாம். மேலும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது, தற்பொழுது தன்னுடைய வீரர்கள் அனைவரையும் மாற்ற முடிவு செய்துள்ளது.

இதனால், நிச்சயம் 9வது அணி உருவாக்கப்படும் எனவும், அதற்காக ஐபிஎல் ஏலமும் புதிதாக நடத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி தானே.

HOT NEWS