ராக்கெட் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1 கோடி 30 லட்சம் வழங்கப்பட்டது!

12 August 2020 அரசியல்
Nambi_Narayanan.jpg

ராக்கெட் விவகாரத்தில் பொய்யான புகாரில் சிக்கிய நம்பி நாராயணனுக்கு, ஒரு கோடியே 30 லட்ச ரூபாயானது வழங்கப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தகவல்களை, வெளிநாட்டிற்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்பொழுது அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். மேலும், அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில், எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றுக் கூறியிருந்தார். அவருடைய வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் 50 லட்ச ரூபாயினை, நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றுக் கூறியது.

இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சனையை விசாரித்த மனித உரிமைகள் ஆணையமும், அதன் பேரில் 10 லட்ச ரூபாயினை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றுக் கூறியது. இதனைத் தொடர்ந்து, திரு நம்பி நாராயணன் கேரளாவின் திருவனந்தபும் சார்பு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். அதில், ஒரு கோடியே 30 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும் என்றுக் கூறினார்.

அதனை விசாரித்த நீதிமன்றம், கேரள முதன்மைச் செயலருக்கு ஒரு கோடியே 30 லட்ச ரூபாயினை வழங்க, உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு இன்று ஒரு கோடியே 30 லட்ச ரூபாயானது, கேரள அரசால் வழங்கப்பட்டது.

HOT NEWS