தோனி மிலிட்டரி செல்கிறார்! அனுமதி மட்டுமே பாக்கி!

22 July 2019 விளையாட்டு
msdhoni.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்பொழுது அதிரடி முடிவு எடுத்துள்ளார். அவர், மிலிட்டரியில் 2 மாதங்கள் பயிற்சி செய்ய உள்ளார்.

இது குறித்துத் தன்னுடைய முடிவை பாராசூட் ரெஜிமெண்டிற்கு அனுப்பிவிட்டாராம். ஆனால், இன்னும், அது குறித்து எவ்வித முடிவையும் மிலிட்டரி தரப்பில் எடுக்கவில்லை என தெரிகிறது.

பாராமிலிட்டரில் கௌரவ வீரராக பதவிபெற்றவர் தோனி. அவர் நான்கு வருடங்களுக்கு முன் பாராசூட்டில் இருந்து குதிப்பதற்கான பயிற்சியையும் பெற்றார். இந்நிலையில், தற்பொழுது இரண்டு மாதங்கள் மிலிட்டரியில் பயிற்சியுடன், பணியாற்ற உள்ளாராம். இது குறித்து, ஏற்கனவே பிசிசிஐயிடம் அறிவித்து விட்டாராம். இதன் காரணமாகவே, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

HOT NEWS