ஐபிஎல் அதிக ஊதியம் பெற்ற தல தோனி! 152 கோடிகளுடன் முதலிடம்!

02 February 2021 விளையாட்டு
csk2.jpg

இதுவரை நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகளில், அதிகமாக ஊதியம் பெற்றவராக, தல தோனி இடம் பிடித்துள்ளார்.

தல தோனி கிரிக்கெட் உலகில், கேப்டனாக செய்யாத சாதனைகளே கிடையாது. அப்படிப்பட்ட சாதனைகளை எல்லாம் அவர் செய்திருந்தாலும், அதற்காகப் பெருமைப்பட்டுக் கொள்வதோ அல்லது கர்வம் கொள்வதோக் கிடையாது. அவர் தற்பொழுது தன்னுடைய சம்பளத்திலும் புதிய சாதனையினைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளானது, இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. அந்தப் போட்டிகளானது 2008ம் ஆண்டு தொடங்கி, நடைபெறுகின்றது. இந்தப் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, மகேந்திர சிங் தோனி நீடித்து வருகின்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில், மோசமாக சிஎஸ்கே அணியானது விளையாடிய போதிலும், அணியின் மதிப்போ அல்லது தோனியின் மதிப்போ குறையவே இல்லை.

இந்த நிலையில், தற்பொழுது வரை யார் அதிக ஊதியம் வாங்கியுள்ளார்கள் என்றத் தகவலானது வெளியானது. 2008 முதல் தற்பொழுது வரை, தல தோனி சுமார் 137 கோடி ரூபாயினை ஊதியமாகப் பெற்றுள்ளார். மேலும், தற்பொழுது விளையாட உள்ள நடப்பு 2021 சீசனிற்கு 15 கோடியினை ஊதியமாகப் பெற உள்ளார். இதன் மூலம், 152 கோடியினை ஊதியமாக ஐபிஎல் போட்டிகளில் அவர் பெறுகின்றார். இதுவரை, யாரும் இவ்வளவு ரூபாயினை ஊதியமாக ஐபிஎல் போட்டிகளில் பெற்றதேக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS