உணர்வுகளை நான் வெளிப்படுத்துவது இல்லை! தோனி பேட்டி!

17 October 2019 அரசியல்
msdhonispeech.jpg

தல தோனி, தற்பொழுது கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் உள்ளார். அவர், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, மீண்டும் இந்திய அணியில் விளையாட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி. அதில், அவரிடம் நீங்கள் ஆடுகளத்தில் கோபம் கொள்வீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த தோனி, நானும் மற்றவர்களைப் போலத் தான் உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால், என்னால் என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால், அது அணியினை தோல்வியின் பாதைக்கு வழிநடத்தும் விதத்தில் அமைந்துவிடும் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன்களில், கூல் கேப்டன் என அழைக்கப்படுபவர் இவ்வாறு கூறியிருப்பது, அனைவரையும், ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS