பிரபல கிரிக்கெட் வீரரின் ஆடையில்லாத புகைப்படம்! மனைவி பகிர்ந்தார்!

02 June 2020 விளையாட்டு
mohmadsamiwife.jpg

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கும், அவரது மனைவி ஹசின் ஜஹான் இடையில் பிரச்சனைக் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

தொடர்ந்து ஷமி மீது புகார் தெரிவித்து வரும், ஹசின் ஷமி பலப் பெண்களுடன் தொடர்பில் இருக்கின்றார் எனவும், கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபடுகின்றார் எனவும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார். இதனால், ஷமியிடம் விசாரணை நடத்தியது பிசிசிஐ.

இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில், புதிய புகைப்படம் ஒன்றினை ஹசின் ஜஹான் பதிவிட்டுள்ளார். அதில், அவர் ஆடையில்லாமல் உள்ளார். இந்தப் புகைப்படத்தினைப் பதிவிட்டப் பின், அத்துடன் தன்னுடைக் கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

அதில், நீங்கள் ஒன்றும் இல்லாத சமயத்தில் நான் உங்களுடன் இருந்தேன் எனவும், தற்பொழுது நீங்கள் வளர்ந்து விட்டதால் என்னை வெறுக்கின்றீர்கள் எனவும் கூறியுள்ளார். தற்பொழுது என்னை தூய்மையற்றவள் எனக் கூறுகின்றீர்கள். உங்களுடைய முதலைக் கண்ணீர் நீண்ட நாட்களுக்குப் பலிக்காது. உண்மையே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS