பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் பண்ணை! முகம்மது கைஃப் அதிரடி பேச்சு!

07 October 2019 விளையாட்டு
mohammadkaif.jpg

பாகிஸ்தான் நாடு, தீவிரவாதிகளை உருவாக்கும் பண்ணையைப் போல செயல்படுவதாக, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்ததில், நாங்கள் அறிந்த மிகப் பெரிய கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இவரல்ல. இவர், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் கைப்பாவையாக உள்ளார்.

பாகிஸ்தான் தொடர்ந்து, தீவிரவாதிகளை உருவாக்கும் பண்ணையாக உள்ளது. 74வது ஐநா சர்வதேசக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கானின் பேச்சிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சேவாக், கங்குலி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும், எதிர்ப்பு தெரிவித்து தங்களுடையக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வரிசையில், தற்பொழுது முகம்மது கைஃப்பும் இணைந்துள்ளார்.

HOT NEWS