மோடிக்கு கொலை மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு!

04 September 2020 அரசியல்
modicovid19.jpg

பாரதப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, அவருக்கு உச்சகட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தியப் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. பின்னர், அது மீண்டும் டிவிட்டர் நிறுவனத்தினரால் சரி செய்யப்பட்டு, மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த டிவிட்டர் கணக்கினைப் பயன்படுத்தி, பிட்காயின் மூலம் பணம் பறிக்கும் முயற்சியில் ஹேக்கர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில், அந்த கணக்கு மீட்க்கப்பட்டது. இது சீனாவின் செயலாக இருக்கலாம் என, பலர் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ள தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, தேசியப் புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பிற்கு, மெயில் வந்தது. அதில், மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, அவருடையப் பாதுகாப்பினை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வருகின்ற எஸ்பிஜி பாதுகாப்பானது, பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அவரை சந்திப்பவர்கள் முதல், அவர் யாரையெல்லாம் சந்திக்கின்றாரோ அவரெல்லாம் அதிகளவில் சோதனை செய்யப்படுகின்றனர். பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்கள் பல ஆண்டுகளாக வந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS