பார்சிலோனாவினை விட்டு விலக மெஸ்ஸி விருப்பம்!

26 August 2020 விளையாட்டு
messi.jpg

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகின்ற உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, அந்த அணியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அர்ஜென்டினா நாட்டினைச் சேர்ந்த 33 வயதுடைய கால்பந்து வீரரான மெஸ்ஸி, உலகளவில் பல சாதனைகளை செய்துள்ளார். அவர் தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் உள்ள, பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வருகின்றார். கடந்த 2004ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை, அந்த அணிக்காக விளையாடி வருகின்றார்.

கால்பந்து விளையாட்டிக்காக, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரருக்கு பாலூன் டீ ஆர் என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகின்றது. இவர் மட்டும், 6 முறை இந்த விருதினை வென்றுள்ளார். இதுவரை இந்த அளவிற்கு யாரும் வென்றதில்லை. இவர் பல கோப்பைகளை, பார்சிலோனா அணிக்காக வென்று தந்துள்ளார்.

தற்பொழுது நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில், இவருடைய பார்சிலோனா அணியானது, ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணியுடன் இறுதி ஆட்டத்தில் மோதியது. அதில், 2-8 என்ற கணக்கில் தோல்வியினைத் தழுவியது. அதில் இருந்தே மெஸ்ஸி மன விரக்தியில் இருந்ததாக, கூறப்படுகின்றது. அத்துடன், 2021ம் ஆண்டுடன் இவருடைய ஒப்பந்தமும் முடிவடைகின்றது. இதனால், அவர் தற்பொழுது தான் விலக விரும்புவதாக அறிவித்துள்ளார்.

அவர் விலகக் கூடாது என, அந்த அணியின் மைதானமான கேம்ப் நௌவ் அரங்கின் முன்பு, ரசிகர்கள் திரளாகக் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த அணியின் நிர்வாகமும், இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றது. அவருடைய இன்றைய மதிப்பு என்பது, சுமார் 700 மில்லியன் ஐரோப்பிய யூரோக்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS