மங்கூஸ் பேட் வேண்டாம்! ஹேடனிடம் கேட்ட தோனி! மறுத்த ஹேடன்!

11 May 2020 விளையாட்டு
mongoosebat.jpg

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டன், தோனியுடன் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஐபிஎல் போட்டியில் நான் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினேன். அப்பொழுது, நான் மங்கூஸ் பேட்டினைப் பயன்படுத்தினேன். அப்பொழுது, தோனி என்னிடம் பேசினார். அவர் பேசுகையில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருகின்றேன். இந்த உலகில் எதைக் கேட்டாலும் தருகின்றேன். ஆனால், இந்த மங்கூஸ் பேட்டினை மட்டும் பயன்படுத்த வேண்டாம் என்றார்.

அதற்கு நான், இந்த பேட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றேன். எனவே, இதில் பேட்டிங் செய்கின்றேன் என்றுக் கூறினேன். அதற்கு தோனி, ப்ளீஸ், இந்த உலகில் நீங்கள் எதைக் கேட்டாலும் வாங்கித் தருகின்றேன், தயவு செய்து இந்த மங்கூஸ் பேட்டினை பயன்படுத்த வேண்டாம் என்றுக் கெஞ்சினா. நான் சிரித்துவிட்டேன் என்றுக் கூறினார். அவர், தன்னுடைய மங்கூஸ் பேட்டால், 93 ரன்கள் அந்த ஆட்டத்தில் விளாசியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS